ஒட்டு மாம்பழங்கள் தேக்கம் ரூ.3.75 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருவிடைமருதூர்: ஆந்திராவில் விளைச்சல் அமோகமாக இருந்ததால் கும்பகோணத்தில் ஒட்டு மாங்காய் எனப்படும் கவுதாரி மாம்பழங்கள் தேக்கம் அடைந்தன. இதனால்  ₹3.75 கோடி வர்த்தகம் பாதித்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

 ஆந்திராவில் உள்ள மாம்பழ சாறு தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பெரிய காய்கனி சந்தைகளில் இருந்து தினம்தோறும் தலா 100 டன் முதல் 200 டன் வரை மாம்பழம்,  மாங்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.  அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மாங்காய்  (கவுதாரி மாம்பழம்) அதிகளவில் விளைச்சல் இருக்கும்.

 இந்நிலையில்  ஆந்திராவில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மாங்காய் விளைச்சல் அதிகமாக இருந்ததால் தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்யவில்லை. மேலும் வழக்கத்துக்கு  மாறாக  ஆந்திராவில் இருந்து தமிழக காய்கனி சந்தைகளுக்கு நாள்தோறும் தலா 150 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்காக வந்தது. அந்த வகையில் கும்பகோணம் காய்கனி சந்தையில்  கவுதாரி வகை மாம்பழங்கள் பெருமளவில் தேக்கமடைந்தன. இதனால் கும்பகோணம் சந்தையில் ₹3.75 கோடி வரை ஒட்டு மாங்காய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: