ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு இன்று முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதே போல் அப்பல்லோ மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன், புவனேஷ்வரி சங்கர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா உள்ளிட்டோரும் இன்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

Advertising
Advertising

இந்த விசாரணையின் போது பல்வேறு தகவல்களை அவர்கள் நீதிபதியிடம் கூறியுள்ளனர். இவர்களை சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அதன் பிறகு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என மனோஜ் பாண்டியனிடம் கேட்கப்பட்டதாகவும் , அதற்கு சந்தேகத்தின் அடிப்படியில் அவ்வாறு மனோஜ் பாண்டியன்   கூறியுதாக, ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: