மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் கலந்தாய்வு கூட்டம் 10 நாட்களில் நடைபெறும்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் இனையம் துறைமுகத்திற்கான ஆய்வு முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய தொழிற் கூட்டமைப்பு சார்பில் பொருளாதார மேம்பாட்டில் துறைமுகத்தின் பங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் 10 நாட்களில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 18.3 கி.மீ நீளமுள்ள நான்குவழி பறக்கும் சாலை ரூ.1,530 கோடி‌ மதிப்பில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் மதுரவாயில் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், குளச்சல் துறைமுகத்திட்டத்தையும் விரைவாக செயல்படுத்த முழு வீச்சில் வேலை நடந்து வருவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிறிய துறைமுகங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆய்வுகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து 63 கோடி மதிப்பிலான மதிப்பிலான கடலோர சாலை மற்றும் 16.72 கோடி மதிப்பிலான பயணிகள் முனைய மேம்பாடு உள்ளிட்ட 151 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: