வணிகர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாடு முழுவதும் 28ல் கடையடைப்பு: தமிழகத்தில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: வணிகர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 28ம் தேதி கடையடைப்பு நடைபெறுகிறது. ஆனால்  தமிழகத்தில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பபட்டுள்ளளது.

 அந்நிய நிறுவனமான வால்மார்ட், பிளிப்கார்ட் மூலமாக இந்திய சில்லரை வணிகத்தில் கால்  பதிக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான சில்லரை  வர்த்தகர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி இந்திய ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்லும் அபாயம் உள்ளது.  ஏற்கனவே டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ள நிலையில் இது மேலும் இந்திய பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தும். ஆயிரக்கணக்கான சிறு  முதலாளிகள் தொழிலாளிகளாக மாறும் நிலையும், வேலை வாய்ப்பு இழக்கும் அபாயமும் ஏற்படும்.    எனவே, இந்திய வணிகர்களை காப்பாற்றும் வகையிலும், பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்களை மாற்றியமைக்க கோரியும் வருகிற 28ம் தேதி நாடு  முழுவதும்  கடையடைப்பு (பாரத் பந்த்) நடத்துவது என அகில இந்திய வணிகர்கள்  சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 23ம் தேதி மாபெரும் உண்ணாவிரதப்  போராட்டம் நடைபெறும். அதன்  பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டமன்றம் கூடும்போது  சட்டப்பேரவையை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபடுவோம். தொடர்ந்து தொடர்  கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.

கோரிக்கைகளை  வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். மத்திய  அமைச்சர்கள், முதல்வரை சந்தித்தும் மனு  அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த  தீர்வும் காணப்படவில்லை. வணிகர்களின் கோரிக்கை முற்றிலும்  புறக்கணிக்கப்பட்டு உள்ளது. அதனால்தான்  போராட்ட நிலைக்கு நாங்கள்  தள்ளப்பட்டுள்ளோம் என்று வணிகர்கள் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் இந்த பந்த்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில்  நேற்று  நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை  தாங்கினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: தமிழகத்தில் இந்த வருடம்  பலமுறை  கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, வரும் 28ம்  தேதி கடையடைப்புக்கு மாற்றாக கருப்பு சட்டை அணிந்து மண்டல  அளவில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். வணிகர்கள்  கருப்பு சட்டை அணிந்து  பங்கேற்பார்கள் என்றார்.விரைவில் போராட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியதாவது, அமேசான், பிளிப்கார்ட் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகத்தினால் வணிகர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு சில்லரை  வியாபாரிகளை கண்டுகொள்ளாமல் அந்நிய நிறுவனங்களுக்கு துணை போகிறது. எனவே, விரைவில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து வணிகர் சங்கம்  சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: