தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடிய, விடிய பலத்த மழை: இன்றும் நீடிக்கும்

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது.வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விருதுநகர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை,  நீலகிரி, கோவை, ஈரோடு, தூத்துக்குடி, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை  பெய்தது. பல இடங்களில் இரவு முழுவதும் விடிய, விடிய கனமழை கொட்டியது.மழைக்கு நடுவே பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் மழையால் வீடுகள்  சேதமடைந்தன. விருதுநகர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், தர்மபுரி, வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இடியுடன்  கூடிய கனமழை கொட்டியது. தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும் வெப்பச் சலனம் காரணமாக அநேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: