சென்னை மைலாப்பூரில் உளவுப்பிரிவு காவலர் எனக்கூறி முதியவரிடம் இருந்து நகை பறிப்பு

சென்னை: சென்னை மைலாப்பூரில் உளவுப்பிரிவு காவலர் எனக்கூறி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளரை ஆட்டோவில் கடத்தி சென்று நகை பறிக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மைலாப்பூரை சேர்ந்த பரமசிவம் என்பவர், அப்பகுதியில் உள்ள நர்ஸ்-சர்ச் சாலையில் நடைப்பயிற்சியில் மேற்கொண்டுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், கட்டிட வேலைக்கு வரும்படி பரமசிவத்தை அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து, தான் கட்டிட வேலை செய்பவர் அல்ல என்று பரமசிவம் கூறியுள்ளார். பின்னர் அந்த ஆட்டோவில் இருந்த நபர் கட்டிட வேலை செய்பவர்கள் இருக்கும் இடத்தை தன்னுடன் வந்து காட்டும் படி அழைத்துள்ளார்.

அவருடன் செல்ல பரமசிவம் மறுத்த நிலையில், தான் ஒரு உளவுப்பிரிவு காவலர் என்றுக் கூறி வலுக்கட்டாயமாக அவரை ஆட்டோவில் ஏறச் செய்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் பரமசிவம் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டதாக பரமசிவம் தெரிவித்துள்ளார். இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: