இறக்குமதி செய்யப்பட்டுள்ள மலேசிய மணலை இணையத்தளத்தில் பதிவு செய்து பெறலாம்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி: இறக்குமதி செய்யப்பட்டுள்ள மலேசிய மணலை,  பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தூத்துகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மலேசிய மணலை பெறுவதற்கான இணையதள பதிவு நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 1 மெட்ரிக் டன் 9500 ருபாய் என்ற விலைக்கு மணலை பெறலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மணல் பெறுவதற்கு பதிவு செய்த ஓரிரு நாட்களில் மணலை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். பொதுமக்கள், இடைத்தரகர்கள் தொல்லை இல்லாமல் எளிதில் மணலை பெற்று பயனடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: