மேட்டூர் நீர்மட்டம் 106 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் நீர்மட்டம் 106.73 அடியாக சரிந்துள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,608 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று  6,099 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர்மின்நிலையம்  மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 22,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாயில் 800 கனஅடி என மொத்தம் 22,800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 107.79 அடியாக இருந்த நீர்மட்டம்,  நேற்று 106.73 அடியாக சரிந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: