வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்பு

பெரம்பூர்: இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக 1-1-2019 அன்று 18 வயது  பூர்த்தியானவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டிலில் சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகம், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலகம், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று தங்களது  பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரிபார்த்து வருகின்றனர். மேலும், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணங்களை  அக்டோபர் 31ம் தேதி வரை அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பிரதான கட்சிகள்தான் இந்த முகாமில் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்க விண்ணப்பங்களை வாங்குவர். இந்நிலையில், முதல் முறையாக வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நேற்று நடந்த  முகாமில், காலை முதல் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு வேண்டிய விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். இதுவரை ரஜினி அதிகாரப்பூர்வமாக கட்சி அறிவிக்கவில்லை என்றாலும், வடசென்னை  மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தல் களத்தில் போட்டிக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: