பல்லாவரம் சங்கர் நகரில் காவல் நிலையத்தை அழகுபடுத்தும் மக்கள்: தன்னார்வலர்கள் உதவி

பல்லாவரம்: பம்மல் அடுத்த சங்கர் நகரில் பல கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட காவல்நிலையம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது.  இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 04.06.2018 அன்று கட்டி முடிக்கப்பட்ட சங்கர் நகர் காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலம்  திறந்து வைத்தார். இதையடுத்து, அரசின் உதவியை  எதிர்பார்க்காமல், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலையத்தை அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கையான புல் தரைகள்  மற்றும் நிழல் தரும் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: