பக்கிங்காம் கால்வாயில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு: பணிகள் பாதியில் நிறுத்தம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மணலி தொழிற்பேட்டையில் உள்ள ஐஓசிஎல் நிறுவனம் வரை எரிவாயு கொண்டு செல்வதற்காக 24 கி.மீ. தூரம் ராட்சத குழாய் அமைக்கும் பணி நடைபெற்று  வருகிறது. இந்தப் பணியானது எந்த ஒரு சட்ட விதிகளையும் கடைபிடிக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் வகையில்  பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்தும், அலையாத்தி காடுகளை அழித்தும், கற்களை  கொட்டி குழாய் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ராட்சத குழாய் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து  வந்தனர். இந்நிலையில், நேற்று எரிவாயு எண்ணை குழாய் அமைக்கும் பணி தொடங்கியது. தகவல் அறிந்ததும்  எண்ணூர் மீனவ சங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றனர்.  குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில ஊழியர்களிடம் பணிகளை உடனே நிறுத்தக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணிகளை பாதியில்  நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: