டிப்ளமோ நர்சிங் முதல்கட்ட கலந்தாய்வில் 1,706 இடங்கள் நிரம்பின

சென்னை: தமிழகத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு (மாணவிகளுக்கு மட்டுமானது) அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்பம் விற்பனை, ஜூலை 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. தரவரிசைப்பட்டியல் அடிப்படையில், கடந்த 17ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது.  முதல்நாளில் சிறப்புப்பிரிவு இடங்களுக்கும் கடந்த 2 நாட்களாக பொதுப்பிரிவு இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. மொத்தமுள்ள 2 ஆயிரம் இடங்களுக்கு தரவரிசைப் பட்டியலில் முதல் 5 ஆயிரம் மாணவிகள் அழைக்கப்பட்டனர். 3 நாள் கலந்தாய்வின் முடிவில், 1,706 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 294 இடங்கள் 2ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், 2ம் கட்ட கலந்தாய்வு தேதி www.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய இணைதளங்களில் வெளியிடப்படும் எனவும் மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: