சென்னையில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை - தன்னார்வ தொண்டு அமைப்பிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையின் உடல் நலம் தேறியதை அடுத்து, அந்த குழந்தையை தற்காலிகமாக பராமரிக்கும் பொறுப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வளசரவாக்கத்தில் கால்வாயில் மிதந்த ஆண் குழந்தையை கீதா என்பவர் கண்டெடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தைக்கு கடும் நோய்த்தொற்று ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது குழந்தையின் எடை ஒரு கிலோ 900 கிராமாக இருந்த நிலையில், தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டப்பட்டதால், தற்போது 2 கிலோ 400 கிராமாக எடை தேறியுள்ளது. இதையடுத்து, போரூரில் உள்ள காரூண்யா குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைகப்பட்டுள்ளது. இதற்கான செலவுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 150 ரூபாய், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: