ஊழலின் கதாநாயகன் முதல்வர் எடப்பாடி... கூட்டாளிகள் அமைச்சர்கள் : சேலம் ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை : தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவது திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

அப்போது மு.க. ஸ்டாலின் பேசுகையில்;  ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சி எதற்கும் பயனற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டினார். ஆகையால் எடப்பாடி அரசை தூக்கி ஏறிய தமிழ்நாட்டு மக்கள் தயாராக உள்ளார்கள் என்று பேசினார். ஊழலின் கதாநாயகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். மேலும் ஊழல் கதாநாயகனின் கூட்டாளிகள் அமைச்சர்கள் என்று ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் வரும் முன்பே அதிமுக ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் அதிமுக ஆட்சி அகல வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறிய அவர், தமிழக வரலாற்றில் இப்படி ஒரு ஊழல் ஆட்சியை மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றும் வரை திமுக போராட்டம் தொடரும் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: