5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை; வால்பாறையில் 31 செ.மீ. மழை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வால்பாறையில் 31 செ.மீ. மழை

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாளாவில் 17 செ.மீ. மழையும், நடுவட்டத்தில் 12 செ.மீ. மழையும், செங்கோட்டை 9 செ.மீ., பொள்ளாச்சி 7 செ.மீ., பாபநாசம், மணிமுத்தாறு தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: