தாம்பரம்-செங்கோட்டை இடையே பகல் நேர ரயில் அறிமுகம்

சென்னை: தாம்பரம்-செங்கோட்டை இடையே பகல் நேர (அந்தோதியா) விரைவு ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே 2018-19 ஆண்டுக்கான ரயில்கள் கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. சுதந்திர தினத்திலிருந்து அமலாக உள்ளதாக  அட்டவணையில் இடம் பெற்றுள்ள விவரம்: தாம்பரம்-செங்கோட்டை இடையே தினசரி பகல் நேர ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 10.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். அதேபோல், மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து அதிகாலை 6.00 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 10.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் சேவை துவங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

29 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்: சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்தும், கடற்கரையில் இருந்தும் இயக்கப்படும் 29 லோக்கல் ரயில் நேரங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம் தொடர்பான தகவல்கள் தெற்கு ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேரம் மாற்றம் தொடர்பாக ரயில் நிலையங்களிலும் அறிவிப்பு வெளியிடப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: