போலி மது விற்பனை கண்டுக்காம இருக்க ஏடிஎஸ்பிக்கே லஞ்சம்: 2.8 லட்சம் வசூல் செய்து தந்தவர் கைது

ராமநாதபுரம்: போலி மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக ஏடிஎஸ்பி.க்கு லஞ்சம் தர ₹2.80 லட்சம் வசூல் செய்து கொண்டு வந்தவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்தவர் முருகன். இவர் இப்பகுதியில் போலி மது விற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக போலீஸ் கெடுபிடி அதிகமாகியுள்ளது. இதனால் தொழில் செய்ய முடியவில்லை.  எனவே கெடுபிடியை தளர்த்த, லஞ்சம் கொடுக்க முடிவு செய்துள்ளர். இதற்காக அதே பகுதியை சேர்ந்த மற்ற போலி மது விற்பவர்களிடம் இருந்து மொத்தம் ₹2.80 லட்சம் வசூல் செய்தார். இதை கொடுப்பதற்காக ராமநாதபுரம்  மது விலக்கு பிரிவு ஏடிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று முருகன் வந்தார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த ஏடிஎஸ்பி வெள்ளைத்துரையிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த ஏடிஎஸ்பி, அவரை கையும்  களவுமாக பிடித்து கைது செய்தார். அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து எஸ்பி ஓம் பிரகாஷ் மீனாவிடம் ஒப்படைத்தார்.இவரிடம் பணம் கொடுத்த பாம்பன் பகுதியை சேர்ந்த போலி மது வியாபாரிகள் மோகன், திரவியம், அன்பு, சபீர், ரியாஸ் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: