இந்திய அரசியல் வரலாற்றில் கருணாநிதியின் சாதனையை முறியடிக்க முடியாது: பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் புகழாரம்

பெங்களூரு: ‘‘கலைஞர் கருணாநிதி, திராவிட பண்பாட்டிற்கு அடையாளமாக திகழ்ந்தவர்’’ என பெங்களூரு மாநகராட்சி உறுப்பினர்கள் புகழாரம் சூட்டினர். பெங்களூரு மாநகராட்சி கூட்டம் தொடங்கிய உடனே காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குணசேகர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேயர் சம்பத்ராஜ், இதற்கு அனுமதி அளித்தார். அதன் பிறகு மேயர் சம்பத்ராஜ் பேசுகையில், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து துறையிலும் திறமைமிக்கவர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். கலைஞர் என்ற சிறப்பு பெயர் அவருக்கு மட்டுமே பொருந்தும்’’ என்றார். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரங்கல் தீர்மானத்தின் பேசிய கவுன்சிலர்கள் இந்திய அரசியல் வரலாற்றில் கருணாநிதியின் சாதனையை முறியடிக்க முடியாது என்று புகழாரம் சூட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: