ஆம்பூர்: ஆடிக்கிருத்திகையையொட்டி ஆம்பூரில் வெள்ளி வேல் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆடிக் கிருத்திகையையொட்டி வரும் 4ம் தேதி பரணி காவடியும், 5ம் தேதி ஆடி கிருத்திகையும் கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கைலாசகிரி, ஞானமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை மீது உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆம்பூர், பெரியாங்குப்பம், உம்ராபாத், துத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணி, பழனி, ரத்தினகிரி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களுக்கு நடைபயணமாக சென்று நேர்த்தி கடன் செலுத்துவர்.
