விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு : விவசாயிகள் நடத்த இருந்த போராட்டத்திற்கு திடீர் அனுமதி மறுப்பு

கோவை : விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்த இருந்த போராட்டத்திற்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணியை மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆனால் விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி நிலத்தின் மதிப்பும் வெகுவாக குறையும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மின்கோபுர பணிகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் இன்று 36 இடங்களில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இதற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி அளித்த நிலையில் இன்று ஆர்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளனர். ஏற்கனவே சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு வழுத்து வரும் நிலையில், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஆர்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: