குற்றாலத்தில் நிலவும் இதமான சூழல் : சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

குற்றாலம்: குற்றால அருவிகளில் மிதமான அளவுக்கு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் களைகட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் 2 நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதோடு அருவிகளில் மிதமான அளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றால அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுகாதாரத்தை பேணுவதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜில்லென்ற காற்றும், சாரலும் குற்றாலத்தை குதூகலமாக்கி உள்ளன. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: