செங்கல்பட்டு: சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரான .அ.ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம்,. செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திலும் பயன்படுத்த வேண்டிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் போன்றவற்றை எவ்வாறு கையாள்வது?, அஞ்சல் வாக்கு படிவம் எப்படி பெறுவது?, மண்டல அலுவலர்களுக்கான கடமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்து மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், மாவட்ட துணை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….
The post செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்பு: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.