சென்னை : தொடக்க கல்வி பட்டய (D.T.Ed) படிப்பு படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதியும், முதலாண்டு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் டிடிஎட் என்னும் தொடக்க கல்வி பட்டயப் படிப்பு படித்து வருவோரில் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் ஜூன் 4ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிகின்றன.