28ம் தேதிவரை கேரளாவில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 28ம் தேதிவரை மிக பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கேரளாவில் ெதன்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி ெதாடங்கும். ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் மழை பெய்து வருகிறது. மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் இது தொடர்பாக கேரளாவின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 28ம் தேதிவரை கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யும்.

அதிகபட்சமாக 21 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்ைக மேற்கொள்ளவேண்டும். 30ம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும். இன்று மிக பலத்த மழை பெய்யும். சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: