திருப்பதி கோயில் விவகாரத்தில் பாஜ நாடகம் வேண்டாம்: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

ஐதராபாத்: திருப்பதி தேவஸ்தான் விவகாரத்தில் பாஜ எந்த நாடகத்தையும் நடத்த வேண்டாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

பிரதமர் பதவி மீது எனக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது மாநில நலனுக்காக அதை மறுத்துள்ளேன். இப்போது சிலர் பாஜ- காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அதை 22 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து காட்டியுள்ளேன். 1996ல் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. மாநில நலனுக்காக அதை மறுத்த நான், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடாவை பிரதமராக ஆதரவு அளித்தேன்.

இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு இல்லாமல்  மத்தியில் எந்த கட்சியும் ஆட்சி செய்யமுடியாது. திருப்பதி கோவிலின் நகைகள் எனது வீட்டில் இருப்பதாக பாஜ தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முதலில் திருப்பதி கோவில் நகை பட்டியலில் இல்லாத வைரம் இப்போது பட்டியலில் இடம்பிடித்தது எப்படி?அலிபிரியில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் இருந்து திருப்பதி பெருமாள் என்னை காப்பாற்றி மறுபிறவி கொடுத்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். திருப்பதி தேவஸ்தானம் விவகாரத்தில் பாஜ எந்த நாடகத்தையும் நடத்த வேண்டாம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: