லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்னில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அலஸ்டர் குக், ஸ்டோன்மேன் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பாகிஸ்தானின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். முகமது அப்பாஸ் வேகத்தில் ஸ்டோன்மேன் (4) ஸ்டம்புகள் சிதறி ஆட்டமிழந்தார். கேப்டன் ரூட் (4), மாலன் (6) ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை ஹசன் அலி வீழ்த்தினார். பயர்ஸ்டோ 27 ரன்னில் பஹீம் அஷ்ரப் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் நல்ல ஒத்துழைப்பு தர குக் அரைசதம் அடித்தார்.