குமாரசாமி ஆட்சியில் 2 துணை முதல்வர்கள்? : மஜக-காங்கிரஸ் தீவிர ஆலோசனை

பெங்களூரு : மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி இன்று டெல்லி செல்கிறார்.  அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ,சோனியாவை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார். இந்த  ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவரும். மேலும் புதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசில் 2 துணை முதல்வர்கள் இடம்பெறுவார்கள் என காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.  

குமாரசாமி மே- 23 அன்று தனியாக தான் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பிறகு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றே தகவல்கள் கசிந்து உள்ளது.

புதன்கிழமை குமாரசாமி பதவியேற்ற உடன் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் அவர் வெற்றி பெற்ற பிறகு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக

கர்நாடகாவுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர் பதவியை ஒதுக்கீடு செய்வது, யார் யாருக்கு பதவி அளிப்பது என்பது குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் உள்ளது. இதனால், புதன்கிழமை குமாரசாமி மட்டும் முதல்வராக பதவி ஏற்பார். அதன் பின்னர், மற்றவர்களை அமைச்சராக்குவது பற்றி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: