கோழிக்கோட்டில் பரவி வருகிறது நீபா வைரஸ்: இதுவரை 6 பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளாவில் நீபா என்னும் புதுவகை வைரஸ் தாக்குதலுக்கு 6 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மிகவும் அரிதான மரணத்தை ஏற்படுத்தும் நீபா என்ற வைரஸ் பரவி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 6 பேர் உயிரிழந்துவிட்டனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நீபா வைரஸ் பரவல் கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸின் தன்மையை கண்டறிவதற்காக உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள், புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவில் நீபா வைரஸை தடுத்து நிறுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளருடன் அமைச்சர் ஜே.பி.நட்டா அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து உடனடியாக கோழிக்கோடு மாவட்டத்திற்கு சென்று நீபா வைரஸ் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நோய் தடுப்பு மைய இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: