புதுடெல்லி: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன் இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவேற்றியது. அதில் ஆசாராம் உடன் பிரதமர் மோடி மேடையில் ஒன்றாக நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.