மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா

மதுரை: உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அஷ்டமி சப்பர விழா நடந்தது. சுவாமியும், அம்மனும் மாசி மற்றும் வெளி வீதிகளில்  அஷ்டமி சப்பரத்தில் உலா வந்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்  பங்கேற்று சுவாமி, அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பர விழா நடைபெறுகிறது. மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பாடு நடந்தது.சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பிரியாவிடை அஷ்டமி சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் மற்றொரு சப்பரத்திலும் எழுந்தருளி,  கயிலாய வாத்தியம் முழங்க மாசி மற்றும் வெளி வீதிகளில் உலா வந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அஷ்டமி சப்பரங்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அம்மன் சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அனைத்து உயிர்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், சாலைகளில் தூவப்பட்டிருந்த அரிசி மணிகளை, பக்தர்கள் இறைவனின் பிரசாதமாக கருதி எடுத்து சென்றனர்….

The post மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா appeared first on Dinakaran.

Related Stories: