ஆட்சியில் மட்டும் இல்லைங்க… காட்சியிலும் ‘கலைஞரே’ பெஸ்ட்

தேர்தல் அறிக்கை பொதுவாக மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், அந்த அறிக்கையை அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் வழங்கி பிரமிப்பை ஏற்படுத்தியவர் கலைஞர். தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியவர் அவர் என்பது தமிழக அரசியல் வரலாறு. கடந்த 2006க்கான திமுக தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படுமென கலைஞர் அறிவித்தார். இது எப்படி சாத்தியம்? சான்சே இல்லை. அப்படியே வழங்கினாலும் தரமாக இருக்காதுப்பா  என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் பேசினர். திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டது. குடிசை வீடுகளில் கூட டிவிக்கள் நுழைந்தன.இதிலென்ன ஆச்சரியம். ‘‘சொன்னாங்க… செஞ்சாங்க’’ என்கிறீர்களா? மேட்டர் அதுவல்ல… இலவசம் என்பதற்காக எடுத்தேன், கவிழ்த்தேன் என செய்யாமல், சிறந்த கம்பெனி தயாரித்த தரமான சாதனங்களுடன் தரப்பட்டது. வழங்கி 15 ஆண்டுகளை தாண்டியும் இப்போதும் பல வீடுகளில்  பளீரென ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றியை மனதில் கொண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 2011, ஜூன் 30ம் தேதி முதல் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி மற்றும்  கிரைண்டர்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அறிவித்தபடி வழங்க இயலவில்லை. பல பொருட்கள் ரேஷன் கடையை தாண்டியதுமே கழன்று விழுந்தன. ஷாக் அடித்தன. தரமற்ற பாகங்களை கொண்டு தயாரித்ததால், காயலான் கடைக்கு சென்றன. ‘‘கலைஞர் வழங்கிய டிவி போல இல்லைப்பா’’ என பொதுமக்கள் கூறிச்சென்றனர். இதைக்கூட விடுங்க. எல்இடி ஸ்மார்ட் டிவி காலத்தில் கூட வீட்டு பெட்ரூம், தனியறையில் இலவச டிவி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. டிவி மெக்கானிக் செல்வராஜ் கூறுகையில், ‘‘தற்போது எல்இடி டிவிக்கள் வருகை அதிகரித்துள்ளது. இப்போது மார்க்கெட்டில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட் டிவிக்களுக்கு கூட குறைந்த காலமே வாரண்டி தரும் சூழலில், 15 ஆண்டுகளாக கலைஞர் டிவி பல வீடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்சர் டியூப் கூட 15 வருட கேரண்டியில் தயாரானது. சாதாரணமாக பழைய டிவியை நாங்கள் ரூ.500 முதல் ஆயிரம் வரைதான் எடுப்போம். கலைஞர் வழங்கிய டிவி ரூ.1,500க்கும் கூடுதலாக போகும். தரமான பாகங்களே இதற்கு முக்கிய காரணம்’’ என்றார்….

The post ஆட்சியில் மட்டும் இல்லைங்க… காட்சியிலும் ‘கலைஞரே’ பெஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: