×

தமிழ் இயக்குனரின் ஏஐ படம் அவிரா

சென்னை: முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி உருவாகி வரும் முழு நீள திரைப்படம் ‘அவிரா’. எழுபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய பிரபாகரன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி சார்பில் கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர். முழுக்க Photo Realistic A I தொழில்நுட்பம் மூலம் படத்தை தயாரித்திருப்பது இந்தியாவிலேயே இது தான் முதன்முறை.

படம் குறித்து இயக்குனர் பிரபாகரன் கூறியது: அவிரா என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என்று பொருள். புராண காலத்து கதையை அடிப்படையாக கொண்டு கற்பனை கதையாக வரும் இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கியிருக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் பேண்டஸி படம் இது. இறுதிகட்ட பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

Tags : Chennai ,Prabhakaran ,Ganesh ,Jagadish ,Light House Film Company ,India ,
× RELATED அஜித் படம் உள்பட படங்களை நிராகரித்த ஸ்ரீலீலா