×

காமராஜர் படத்தை நாட்டுடமை ஆக்க கோரிக்கை

சென்னை: காமராஜர் வாழ்க்கையை தழுவி உருவான ‘காமராஜ்’ படத்தை ஏ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியிருந்தார். இது குறித்து அவர் கூறியது: இந்த திரைப்படம் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது. ‘காமராஜ்’ திரைப்படத்துக்குப் பின் ‘WELCOME BACK GANDHI’ ‘திருக்குறள்’ போன்ற படங்களை தயாரித்தேன். அவைகளும் ‘காமராஜ்’ திரைப்படத்துக்கான கடனை திரும்பச்செலுத்த உதவவில்லை.

அதனால் மிகுந்த மனச்சுமையுடன், கடன் வழங்கியவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றி, வாழ்வில் பயணிக்கிறேன்.
‘காந்தி’ திரைப்படத்துக்கு மத்திய அரசு உதவியது. ‘அம்பேத்கர்’ திரைப்படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் உதவின. தமிழக அரசு ‘பெரியார்’ படத்துக்கு உதவியது. தற்போதைய தமிழக அரசு எனக்கு உதவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

நாட்டின் நலனுக்காகவே தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தைத் முதல்வர் விஜய் நாட்டுடைமையாக்கி, அப்படத்தை உலகத் தமிழர்களுக்கு சமர்ப்பிக்கும்படி வேண்டுகிறேன். அதற்கு ஈவுத் தொகையாக தாங்கள் ரூ.இரண்டு கோடி வழங்கும்படி வேண்டுகிறேன். இதனால் நான் கடனைத் திருப்பிச் செலுத்தி, இத்திருப்பணியை மேற்கொண்டதற்கான மனத்திருப்தியை அடைய இயலும்.

Tags : Chennai ,A. Balakrishnan ,Kamaraj ,government ,
× RELATED ஆபாச போட்டோக்கள் அனுப்பிய 400 பேர்: காயத்ரி ரெமா பகீர் புகார்