கணவருக்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி போடும் கண்டிஷன்

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் தற்போது தெலுங்கில் சாய் துர்கா தேஜ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘சம்பரலா ஏடி கட்டு’ என்ற படத்திலும், ‘ஆஷா’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தமிழில் விஷ்ணு விஷாலுடன் ‘கட்டா குஸ்தி’ 2ம் பாகத்தில் நடித்துள்ளார். இன்று திரைக்கு வந்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமி தனது திருமண வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், ‘முதல்முறையாக ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக நடித்தேன். அப்போது, என்னுள் இருந்த தாய்மை உணர்வு விழித்தெழுந்தது. அதன்பிறகு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க தொடங்கினேன். என் வாழ்க்கை துணையாக வருபவர் எனக்கு நல்ல கணவராக மட்டுமல்ல, என் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, நம்பிக்கையுடன் வாழ்க்கையை பகிரக்கூடிய ஒருவரை தான் நான் விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த கருத்து சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories: