×

சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?

நாக சைதன்யாவுடன் இணைந்து சில தெலுங்கு படங்களில் நடித்தபோது, அவரை காதலித்து திருமணம் செய்தவர், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா. தொடர்ந்து 4 வருடங்கள் இணைந்து வாழ்ந்த அவர்கள், குழந்தை பெறாமல் இருந்த நிலையில், திடீரென்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து மூலம் பிரிந்துவிட்டனர். பிறகு நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தானும் 2வது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த சமந்தா, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதல் திருமணம் செய்தார். இந்நிலையில், சமந்தா தயாரித்து நடித்த ‘மா இன்ட்டி பங்காரம்’, ‘எங்கள் தங்கம்’ ஆகிய தெலுங்கு மற்றும் தமிழ் படத்தின் வெற்றியையும், வசூலையும் கொண்டாடும் வகையில், ராஜ் நிடிமோருவுடன் சேர்ந்து கேக் வெட்டியபோது, சமந்தா கர்ப்பமாக இருக்கும் விஷயம் கசிய ஆரம்பித்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், இவ்விஷயத்தை சோஷியல் மீடியாவில் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

தன்னை தமிழ் படங்களில் இயக்கிய ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்ட அமலா பால், அப்போது குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஜெகத் தேசாயை 2வது திருமணம் செய்துகொண்ட நிலையில், இலை என்ற ஆண் குழந்தையை பெற்றார். இந்நிலையில், சமந்தாவும் அதே பாணியில் குழந்தை பெற்றுக்கொள்வார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகினறனர். தான் தயாரித்து நடித்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றியை முதல் நாளே பெற்றிருந்த நிலையில், அதன் சக்சஸ் பார்ட்டியை ராஜ் நிடிமோரு மற்றும் படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய சமந்தா, அப்போது டிசர்ட் அணிந்து இருந்தார்.

இந்நிலையில், அவரது தோற்றத்தை வைத்து சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை பரப்பி, அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். சமீபத்தில் தனது படத்தின் புரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருந்த சமந்தாவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்களுக்கு எந்தவொரு சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது சக்சஸ் பார்ட்டியில் சமந்தா இருக்கும் தோற்றத்தை வைத்து, அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து சமந்தா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Tags : Samantha ,Pallavaram, Chennai ,Naga Chaitanya ,Sobitha Dhulipala ,
× RELATED விமர்சனம்: நூறுசாமி