×

மமிதா பைஜூவின் ‘பட்டாம்பூச்சி’ பாடல்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 46வது படமாக உருவாகி வரும் இதில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி  உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. ‘பட்டாம்பூச்சி’ என்ற அந்த பாடலை ‘மோனிகா’, ‘பொட்டல முட்டாயே’ போன்ற பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த சுபலாஷினி பாடியுள்ளார். பாடல் வரிகளை நடிகரும், இயக்குனருமான அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஹீரோயின் மமிதா பைஜூ பாடும் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடலில் மமிதா பைஜூவின் சில நடன காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

Tags : Mamita Baiju ,RJ Balaji ,Surya ,Venki Adluri ,Radhika Sarathkumar ,Raveena Tandon ,Bhavani ,G. V. Prakash Kumar ,
× RELATED ஹபீபி” மூலம் நாயகனாக அறிமுகமாகும் தடகள வீரர் ஈசா!