- கலைமான்
- சென்னை
- ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்
- ரவீந்திரன்
- ஸ்டெப் ஒன் ஸ்டுடியோ
- சனந்த்
- ஹார்டின்
- கிஷோர் குமார்
- மடோனா செபாஸ்டியன்
- இமயா. டி
- வாட்ஸ்அப் மணி
- தெப்னிதா கர்
- வர்கீஸ் மேத்யூ
- அஜித் கோஷி
- முகேஷ்
- ராஜேஷ் முருகேசன்
சென்னை: டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘ஹார்ட்டின்’. மடோனா செபாஸ்டியன், இமயா.டி, வாட்ஸ்அப் மணி, டெப்னிதா கர், வர்கீஸ் மேத்யூ, அஜித் கோஷி நடித்துள்ளனர். முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ளார். வரும் 26ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் கிஷோர் குமார் பேசும்போது, ‘படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்துள்ளோம். இமயாவின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும், உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவரது பங்களிப்பும் ஒரு காரணம். இன்றுள்ள சூழ்நிலையில் காதலில் சிச்சுவேஷன்ஷிப், வெக்கேஷன்ஷிப் என்று எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால், லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அது எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன்பு எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும், ‘ஹார்ட்டின்’ தனித்து இருக்கும்’ என்றார்.

