- தனுஷ்
- ராஜ்குமார் பெரியசாமி
- கௌதம் ராம் கார்த்திக்
- சிவகார்த்திகேயன்
- வுண்டர்பார் படங்கள்'
- ஆர் டேக் ஸ்டுடியோஸ்
- சாய் அபியங்கார்
- மம்முட்டி
- சாய் பல்லவி
- ஸ்ரீ லீலா
கவுதம் ராம் கார்த்திக் நடித்த ‘ரங்கூன்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் படம், ‘ஓம்’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து பிரமாண்டமான முறையில் தயாரிக்கின்றன. சாய் அப்யங்கர் இசை அமைக்கிறார். தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். ‘அமரன்’ படத்துக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி மற்றும் ‘மாரி 2’ படத்துக்கு பிறகு தனுஷ், சாய் பல்லவி மீண்டும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் டைட்டில் டீசரில், செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடும் அப்பாவி கூலி தொழிலாளர்களை குறித்த கதை இடம்பெற்றுள்ளது. அடர்ந்த காட்டின் ஆபத்தான பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் அக்டோபர் 16ம் தேதி படம் திரைக்கு வருகிறது. அடுத்து 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. அதை குறிப்பிடும் வகையில், முதல் பாகத்துக்கு ‘ஓம் சாப்டர் 1 உதிரம்: தி பிளட் வுட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 55வது படமாகும்.
