- Rashmika
- ஹாலிவுட்
- விஜய் தேவரகொண்டா
- ராஷ்மிகா மந்தனா
- ராகுல் சங்கிருத்யன்
- மைத்ரி மூவி மேக்கர்ஸ்
- அஜய்
- அதுல்
- அர்னால்ட் வோஸ்லூ
- தியோடர் ஹெக்டர்
திருமணத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் வரலாற்று படம் ‘ரணபாலி’. ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசை இணைகளான அஜய், அதுல் இசை அமைக்கின்றனர். தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் ‘ரணபாலி’ படத்தில் தற்போது புகழ்பெற்ற ‘மம்மி’ என்ற ஹாலிவுட் படத்தின் வில்லன் அர்னால்ட் வோஸ்லூ இணைந்துள்ளார். சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியாக நடிக்கும் அவரது அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஆங்கிலேயர் கால அதிகாரிகளின் உடையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் அர்னால்ட் வோஸ்லூ.
ஹாலிவுட் நடிகர்களை அழைத்து வந்து அவர்களுக்கு அதிகளவிலான சம்பளம் கொடுத்து நடிக்க வைப்பது இந்திய திரையுலகில் தற்போதைய டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘ரணபாலி’ படத்தில் அர்னால்ட் வோஸ்லூ இணைந்திருப்பது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

