×

டார்க் ஜெயன்ட் விமர்சனம்

 

சென்னையில் தனது மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் தங்கை கீர்த்தியுடன் வசிக்கும் ஆதர்ஷ் மதிகாந்த், கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கிறார். அப்போது ஒருவர், கிராமத்தில் இருக்கும் தாத்தா தனது சொத்துகளை பேரன், பேத்திக்கு எழுதி வைக்க விரும்புவதாக சொல்கிறார். இதனால் தனது கடன் பிரச்னை தீரும் என்று மனைவி மற்றும் தங்கையுடன் கிராமத்துக்கு வருகிறார் ஆதர்ஷ். பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பது நெஞ்சை உறைய வைக்கிறது.

அமானுஷ்ய கதைக்கும், தனது கேரக்டருக்கும் ஏற்ற நடிப்பை ஆதர்ஷ் மதிகாந்த் சிறப்பாக வழங்கியுள்ளார். ஆனால், அவரது ‘விக்’ உறுத்துகிறது. அவரது மனைவி ஜோவிதா லிவிங்ஸ்டன், தங்கை கீர்த்தி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ‘அருவி’ மதன், அவரது மனைவி சோனியா அகர்வால் யதார்த்தமாக நடித்துள்ளனர். மற்றும் கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், அமுதவாணன், ரபீக் பாட்ஷா, ஆர்ஜே விஜய் கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை மனதை படபடக்க வைக்கிறது. படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்திருக்க வேண்டும். மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள மக்களுக்கான விழிப்புணர்வு கதையை எழுதி இயக்கியுள்ள கே.எஸ்.கிஷான், திகில் அனுபவத்தை கடைசிவரை நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

Tags : Adarsh Madikanth ,Chennai ,Jovita Livingston ,Kirti ,Adarsh ,
× RELATED நானி தயாரிப்பில் துல்கர் சல்மான்