×

நிழல் விமர்சனம்

ஒரு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வாலிபர்களால் எரிக்கப்படுகிறாள். அதை பார்த்த ரம்யாவை (ஜனனி) அவர்கள் கடத்திச்சென்று கொடூரமாக தாக்குகின்றனர். இதை கண்டுபிடிக்கும் போலீஸ்காரர் விசாகன், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்துக்கான நீதியை வாங்கி கொடுத்தாரா? ரம்யா கதி என்ன என்பது படம் சொல்கிறது.

ரம்யா, மருத்துவமனையில் பணியாற்றும் சரண்யா என்று, இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார் ஜனனி. விசாகன், இறுதி காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார். மற்றும் திவ்யா கிருஷ்ணன், சிவன் சீனிவாசன், கவுசிக், ஹரி விஜய், ‘மோகமுள்’ அபிஷேக், சபீதா ஆனந்த், ரமேஷ் கண்ணா, திலீபன், ‘பாய்ஸ்’ ராஜன், யுவஸ்ரீ சண்முகம், தீபிகா ஆகியோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.

மோகன் குமாரின் ஒளிப்பதிவு கச்சிதம். எம்.அபுபக்கரின் பின்னணி இசை கதையை நகர்த்த உதவுகிறது. கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை ஏ.கே.குமார் இயக்கியுள்ளார். திரைப்பட உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

Tags : Ramya ,Janani ,Visakhan ,Saranya ,Divya Krishnan ,Shivan Srinivasan ,Kaushik ,Hari ,
× RELATED அதிரடி கேரக்டரில் நடிக்கும் அலியா பட்