
பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட், தற்போது ஷிவ் ராவில் இயக்கியுள்ள ‘ஆல்பா’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். யஷ் ராஜ் பலிம்ஸ் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இதுவரை ஆண் கேரக்டர்களை மையமாக கொண்டு பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வந்த யஷ் ராஜ் பிலிம்ஸ், முதல்முறையாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘ஆல்பா’ என்ற படத்தை உருவாக்கியுள்ளது. முக்கிய கேரக்டர்களில் பாபி தியோல், அனில் கபூர், ஷர்வரி வாக் நடித்துள்ளனர்.
முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த இப்படம், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் ஜூலை 3ம் தேதி உலகம் முழுவதும் படம் திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதிரடி மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் கூடிய இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, அலியா பட்டின் அதிரடி தோற்றமும், படத்தின் பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. டீசர் வெளியீட்டின் மூலம் ‘ஆல்பா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

