×

‘டியூட் 2’ மூலம் மீண்டும் இணையும் கூட்டணி

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். அவரது ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்தார். மேலும் சரத்குமார், ரோகிணி, நேகா ஷெட்டி, ‘பரிதாபங்கள்’ ராகுல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிபெற்றது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தீஸ்வரனிடம், ‘டியூட் 2’ படம் உருவாகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘எனது இயக்கத்தில் ‘டியூட் 2’ படம் குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் பேசியுள்ளேன். 2ம் பாகம் உருவானால், அது ‘டியூட்’ படத்தின் நேரடி தொடர்ச்சியாகவோ அல்லது அதே கதையை மையமாக கொண்ட புதிய கதையாகவோ அமையும்’ என்றார். இதனால், ‘டியூட்’ படத்தின் 2ம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Tags : Pradeep Ranganathan ,Keertheeswaran ,Sudha Kongara ,Mamita Baiju ,Sarathkumar ,Rohini ,Neha Shetty ,Paritaphangal' Rahul ,
× RELATED சோனாக்‌ஷியை பாராட்டிய ஜோதிகாவின் கணவர்