×

‘டயங்கரம்’ படத்துக்கு வில்லனாக மாறிய ஜெனரேட்டர்

தமிழில் ‘டயங்கரம்’ என்ற படத்தை விஜே சித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய கேரக்டர்களில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் நடிக்கின்றனர். சித்து குமார் இசை அமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்நிலையில், பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படக்குழுவினர் நீண்ட நேரம் பணியாற்றிய காரணத்தால், படப்பிடிப்பு தளத்தில் மின்சாரம் வழங்கிய ஜெனரேட்டர் செயலிழந்துவிட்டதாகவும், அதனால்தான் படப்பிடிப்பு பணிகளில் திடீரென்று தடை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்டபடி நடந்து வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

Tags : Vijay Sidhu ,Natty ,Kaali Venkat ,Ilavarasu ,Nitin Sathya ,Harshad Khan ,Kathir ,Sidhu Kumar ,Dinesh Krishnan ,Pradeep E. Raghav ,
× RELATED சென்சாரில் தட்கல் முறை திடீர் ரத்து