×

விமர்சனம்: சன்னிதானம் PO

சபரிமலை சன்னிதானம் போஸ்ட் ஆபீசுக்கு அருகில், பல வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன ஒரு சிறுவன், தற்போது கைதேர்ந்த ஒரு சமையல்காரராக (யோகி பாபு) மாறியிருக்கிறார். அவரது அம்மா சித்தாரா, யோகி பாபுவை தேடுகிறார். அப்போது போலீஸ்காரர் கஜராஜின் மகள் வர்ஷா விஸ்வநாத்தும் யோகி பாபுவை தேடுகிறார். இறுதியில் யோகி பாபுவை கண்டுபிடித்தனரா என்பது மீதி கதை.

தாயாக சித்தாரா, தனது அனுபவ நடிப்பின் மூலம் மனதை நெகிழவைக்கிறார். கதையின் நாயகன்
சமையல்காரர் யோகி பாபு, வழக்கமான பன்ச் டயலாக்பேசி, தனது இருப்பை பலமாக நிரூபித்துள்ளார். தவிர மூணாறு ரமேஷ், வர்ஷா விஸ்வநாத், ரூபேஷ் ஷெட்டி, கஜராஜ், பிரமோத் ஷெட்டி ஆகியோர் படத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

வினோத் பாரதி இயல்பாக ஒளிப்பதிவு செய்திருக் கிறார். ஏஜிஆர் இசையில் ஐயப்பன் பாடல் நன்றாக இருக்கிறது. அஜினு ஐயப்பா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஆன்மீக பின்னணியில் சென்டிமெண்ட் கலந்து வசனம் எழுதி இயக்கியுள்ள அமுதா சாரதி, பட உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Tags : Sabarimalai Sannithanam Post Office ,Yogi Babu ,Sidhara ,Kajraj ,Varsha Vishwanath ,Yogi ,Babu ,
× RELATED பான் இந்தியா படமான ‘பாலன்’