×

கேரள அரசு மரியாதையுடன் சலீம் குமார் உடல் தகனம்

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகரும், மிமிக்ரி கலைஞரும், இயக்குனருமான சலீம் குமார் (56), 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ‘அப்பாவின் மீசை’, ‘நெடுஞ்சாலை’, ‘மரியான்’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ள அவர், 2010ல் மலையாள ‘ஆதாமின்டெ மகன் அபு’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், கேரள அரசு விருதும் பெற்றார். மேலும் பல விருதுகள் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சலீம் குமார், கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சலீம் குமார் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதலமைச்சர் வி.டி.சதீசன், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். நேற்று சலீம் குமாரின் உடல் கேரள அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சலீம் குமாருக்கு மனைவி, இரு மகன்கள் இருக்கின்றனர். ஒரு மகன் சினிமாவில் நடிக்கிறார்.

Tags : Salim Kumar ,Kerala ,Thiruvananthapuram ,Congress party ,
× RELATED பான் இந்தியா படமான ‘பாலன்’