- குஷ்பு
- அவந்திகா
- சென்னை
- பவிஷ்
- சுந்தர்
- தனுஷ்
- அவந்திகா சுந்தர்
- குஷ்பு
- தினேஷ் ராஜ்
- சினெமா மீடியா எண்ட் என்டர்ட
- . தமோ நாகபூஷ்ணம்
- ரஞ்சித்
சென்னை, ஜூன் 8: தனுஷின் சகோதரி மகனும், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானவருமான பவிஷ் மற்றும் சுந்தர்.சி, குஷ்பு தம்பதியின் மகள் அவந்திகா சுந்தர் நடிக்கும் படம், ‘அட்டாக்கர்’. சினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார். பா.ரஞ்சித்திடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்குகிறார். வாலிபால் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தை மையப்படுத்தி படம் உருவாகிறது.
முக்கிய வேடங்களில் இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் நடிக்கின்றனர். பவிஷ், அவந்திகா சுந்தர் உள்பட பலர், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இப்படத்தின் மூலம் அவந்திகா சுந்தர் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். ‘லவ் ஓ லவ்’, ‘ரீமேட்ச்’, ‘அட்டாக்கர்’ ஆகிய படங்களின் மூலம் சினிமா மீடியா அண்ட் எண்டர் டெயின்மெண்ட் லிமிடெட், தொடர்ந்து தனித்துவமான கதைகளை வைத்து படங்கள் தயாரித்து வருகிறது.
