×

லலித் மோடி பயோபிக்கில் ரன்வீர் சிங்

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் பயோபிக் உருவாக்கப்படுகிறது. இதுபற்றி லலித் மோடி கூறுகையில், ‘திரைக்கதை எழுதும் பணியில் தனி குழு ஈடுபட்டுள்ளது. எனது கேரக்டரில் நடிக்க ரன்வீர் சிங் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். அவர்தான் மிகவும் பொருத்தமானவர் என்று நானும் விரும்புகிறேன். ஆனால், அவருக்கு நேரம் இருக்க வேண்டும். காரணம், இப்போது அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். எனக்கு ரன்வீர் சிங்கை தெரியாது.

ஆனால், தீபிகா படுகோனை நன்கு தெரியும். ஒருநாள், ‘ரன்வீர் உங்களை சந்திக்க விரும்புகிறார்’ என்று எனக்கு அழைப்பு வந்தது. 2 வருடங்களுக்கு முன்பு, என்னை சந்திக்க லண்டனுக்கு வந்தார். லலித் மோடி கேரக்டரில் நடிக்க விரும்புவதாக சொன்னார். ரன்வீர் சிங் ஒரு சிறந்த கலைஞர். இந்தியில் வெளியான ‘துரந்தர்’ படத்தின் 2 பாகங்களிலும் அவரது நடிப்பு பிரமிப்பு ஏற்படுத்துவதாக இருந்தது’ என்றார்.

Tags : Ranveer Singh ,Lalit Modi ,IPL ,Deepika Padukone ,Ranveer ,
× RELATED விமர்சனம்: இரட்டையர்