×

பான் இந்தியா படமான ‘பாலன்’

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்ட பின்பு, ‘பாலன்: தி பாய்’ என்ற படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலரை இந்தியில் அஜய் தேவ்கன், தமிழில் சூர்யா, தெலுங்கில் நாக சைதன்யா, கன்னடத்தில் ராஜ் பி.ஷெட்டி ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த டிரைலர் அடையாளம், பொறுப்புணர்வு, உயிர் பிழைப்பு போன்ற மனித உணர்வுகளை மையப்படுத்தி, உணர்ச்சிப்பூர்வமான திரை அனுபவத்தை பிரதிபலிக்கிறது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் கவனத்தை ஈர்த்திருந்த சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கியுள்ளார். ஜீத்து மாதவன் எழுதியுள்ளார். தனி பாணி கதைசொல்லல் கொண்ட இப்படத்தை கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ்‌, தெஸ்பியன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வரும் 19ம் தேதி மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Tags : Pan India ,Cannes International Film Festival ,Ajay Devgn ,Suriya ,Naga Chaitanya ,Raj P. Shetty ,
× RELATED விமர்சனம்: இரட்டையர்