
மும்பை: பாலிவுட் மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ளார். இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 4350 சதுர அடியில் பிரமாண்ட வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை அவர் குவைத் துணைத் தூதரக அதிகாரிக்கு வாடைக்கு வீட்டிருக்கிறார்.
இதன் மூலம் சோனாக்ஷிக்கு ஆண்டுக்கு ரூ.1.92 கோடி வாடகை பணமாக கிடைக்கும். இந்த வீட்டிற்குள் நூலகம், மினி தியேட்டர், உடற்பயிற்சிக் கூடம், விருந்து கூடம், நீச்சல் குளம், விளையாட்டு தளங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

